வின்சன் சிகரத்தில் ஏறி கேரள வீரர் ஷேக் ஹசன்கான் சாதனை.. வீடியோ!

 
Kerala

உலகின் உயரமான வின்சன் சிகரத்தில் கேரளாவை சேர்ந்த வீரர் இந்திய கொடியை ஏற்றி பெருமை சேர்த்துள்ளார்.

அண்டார்டிகா பனிக்கட்டியால் மூடப்பட்ட கண்டம். இந்த பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் உலகின் 7-வது கண்டம். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுதான். புவியின் தென்முனையில் அமைந்து இருப்பதனால் இப்பகுதிக்கு சூரியனின் வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்து சேர்கிறது. இதன் காரணமாக அண்டார்டிகா முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் 6 மாதங்கள் சூரியனின் வெளிச்சமே இங்கு இருக்காது. ஆண்டு முழுவதும் 200 மில்லிமீட்டர் அளவு மட்டுமே மழை பெய்யும் பனி பாலைநிலம் அண்டார்டிகா.

Kerala

இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது. வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதம் இங்கே உள்ளது. ஆனால் மக்களுக்கு பயன்படவில்லை. அண்டார்டிகாவில் ஏறத்தாழ 5 ஆயிரம் மீட்டர் (16 ஆயிரம் அடி) அளவுக்கு தரையில் ஆழ்துளையிட்டால் தான் மண்ணை பார்க்க முடியும். ஏனெனில் 98 விழுக்காடு பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. பலகோடி ஆண்டுகளாக உருகாத பனிப்பாலைவனமாக அண்டார்டிகா விளங்குவதால் எப்பொழுதும் தாங்க முடியாத குளிர்ச்சியே அங்கு இருக்கும். இப்படியாப்பட்ட அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தில் ஏறி கேரள வீரர் ஷேக் ஹசன்கான் சாதனை படைத்து இருக்கிறார்.

இச்சூழலில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷேக் ஹசன்கான் (36). மாநில அரசு ஊழியரான இவர் தனது ஓய்வு நாட்களில் உலகின் மிக உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி சாதனை படைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்தவகையில் எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.


இதன் தொடர்ச்சியாக முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார். இதற்காக அங்கு சென்ற ஷேக் ஹசன்கான், கடும் சவால்களை கடந்து வின்சன் சிகரத்தில் ஏறி இந்திய கொடியை பறக்க விட்டுள்ளார். உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் வின்சன் சிகரத்தில் இந்திய கொடியை பறக்கவிட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள ஷேக் ஹசன்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

From around the web