கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்... மே 10-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குபதிவு!!

 
10-marks-for-vote

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடாகாவில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 2.51 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 

Rajiv

இதனிடையே தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாகவே தேர்தல் களம் அம்மாநிலத்தில் சூடு பிடித்துள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் மக்களிடம் ஆதரவை திரட்டி வருகின்றனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 244 தொகுதிக்கும் மே 10-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Karnataka

வேட்புமனு பரீசிலனை ஏப்ரல் 21-ம் தேதியும், வேட்புமனுவை வாபஸ் பெற ஏப்ரல் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

From around the web