ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பதிலடி கொடுத்த கனிமொழி எம்.பி.!!

 

தமிழர்கள் இந்தி மொழியை ஏன் எதிர்க்கிறார்கள். இந்தியை எதிர்க்கும் தமிழர்கள் ஏன் தமிழ் சினிமாவை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இந்தி பேசும் உ.பி.பீகார். சத்திஸ்கர் மாநில மக்களின் பணம் வேண்டும் இந்தி வேண்டாமா? என்று சரமாரியான குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் அள்ளி வீசியிருந்தார் ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வரும் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகருமான பவன் கல்யாண்.

இவருடைய பேச்சுக்கு சமூகத்தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. பாஜகவுடன் கூட்டு சேர்வதற்கு முன்னால் இந்திக்கு எதிராக பவன் கல்யாண் பேசிய வீடியோக்கள், ட்வீட்களை பகிர்ந்து கேலி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியும் எக்ஸ் தளத்தில் பவன் கல்யாணின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். மொழிகள் தடையின்றி திரைப்படங்களைப் பார்ப்பதற்கு டெக்னாலஜி உதவுகிறது என்று பதிவிட்டு பவன் கல்யாணின் பழைய ட்வீட் மற்றும் பாஜகவுடன் சேர்ந்த பிறகான பல்டியடித்துள்ள பேச்சுக்களைக் குறிப்பிடும் செய்திகளை இணைத்துள்ளார்.