இது வந்தா ரொம்ப நல்லது தான்... ரயில்வே அமைச்சரின் புதிய அறிவிப்பு!!
Oct 8, 2025, 07:32 IST
ரயில்களுக்கு முன் பதிவு செய்யும் முறையில் தொடர்ந்து மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது. பதிவு செய்த நாளுக்கு பயணம் செய்ய முடியவில்லை என்றால் டிக்கெட்டை ரத்து செய்யும் முறையும் உள்ளது. பிடித்தம் போக மீதி பணத்தை திரும்பத் தருவார்கள்.
ஆனால், பயண தேதியை மாற்றுவதற்கான வசதி இது வரையிலும் இல்லை. ஜனவரி மாதம் முதல் முன் பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒரு தேதிக்கு பயணத்தை மாற்றும் வசதியாக இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. பயணதேதியை மாற்றுவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
