முஸ்லீம்கள் தான் எங்களைக் காப்பாற்றினார்கள்.. உயிர் தப்பி இந்து பெண்மணி!!

 
Victim Victim

ஜ்ம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் பள்ளத்தாக்கு என்ற சுற்றுலாத்தலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராணுவ சீருடையில் வந்த மூன்று தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்தனர்.நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய பெண்மணி ஒருவர் பேசும் வீடியோ சமூகத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. “நீங்கள் இந்துவா என்றே கேட்டே தீவிரவாதிகள் எங்களைச் சுட்டனர். அதே வேளையில் இந்த தீவிரவாத தாக்குதலின்போது இங்குள்ள முஸ்லிம்களே எங்களை பாதுகாத்தனர். எங்களுடைய டிரைவர்(முஸ்லிம்) "எங்கள் உயிர்களை கொடுத்தாவது உங்களை பாதுகாப்போம்” என்று சொன்னார். இதுதான் இந்தியாவின் சகோதரத்துவம்! என்று கூறியுள்ளார்.

இந்த பெண்மணியின் பேச்சு இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவின் மதநல்லிணக்கத்தை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது.


 

From around the web