இந்த ரூபாய் நோட்டு செல்லாதா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கி!

 
Rupee

வரிசை எண்களுக்கு அடுத்து வரும் நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகளும் மற்ற ரூபாய் நோட்டுகளைப் போன்றே செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளில் வரிசை எண்களுக்கு அடுத்து நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுக்களாக அச்சிடப்பட்டுள்ளன. அத்தகைய ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்கதா என்பது குறித்து பொதுமக்களிடம் அடிக்கடி சந்தேகம் எழுந்ததோடு, சமூக வலைதளங்களிலும் வதந்திகள் பரவி வந்தது. இதனால் நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வாங்க தயங்கி வந்தனர்.

Rupee

இந்த நிலையில், வரிசை எண்களுக்கு அடுத்து வரும் நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகளும் மற்ற ரூபாய் நோட்டுகளைப் போன்றே செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

அதில், “நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகள் வழக்கமான நோட்டுகளை போல செல்லுபடியாகும். தொடர்ச்சியாக வரிசைப்படுத்தப்பட்ட 100 எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகளில் குறைபாடுடன் அச்சான நோட்டுகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டின் வரிசை எண் பகுதியில் இந்த நட்சத்திர குறியீடு இடம்பெற்றுள்ளது.

RBI

ரூபாய் நோட்டின் எண் இடம்பெறும் பகுதியில் வரிசை எண்ணுக்கு முன்பு அல்லது இடையில் நட்சத்திர குறியீடு இடம்பெறாமல் வரிசை எண்ணுக்குப் பின் நட்சத்திர குறியீட்டைக் கொண்ட ரூபாய் நோட்டுகள் இடம் பெற்றிருந்தாலும், மற்ற சட்டப்பூர்வ ரூபாய் நோட்டுகளைப் போன்று இந்த ரூபாய் நோட்டும் செல்லுபடியாகும்” என தெளிவுபடுத்தியுள்ளது.

From around the web