கோவிட் தடுப்பூசியால் மரணம் அதிகரிப்பா? ஐ.சி.எம்.ஆர் விளக்கம்

 
Heart

இந்தியாவில் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா காலத்துக்குப் பின்னர் இந்தியாவில் இளம்வயது மரணங்கள் திடீரென அதிகரிப்பதால் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. அடிப்படையில் வேறெந்த உடல்நலப் பாதிப்பும் இல்லாத அவர்கள், திடீரென அகாலமாய் மரணமடைந்தார்கள். மாரடைப்பு உள்ளிட்ட காரணங்கள் இதன் பின்னணியில் சொல்லப்பட்டாலும், இளம்வயதினர் மத்தியில் அவை ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது.

COVID

இது தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் இளைஞர்கள் திடீர் மரணம் அடைய கொரோனா தடுப்பூசி காரணம் என்று கூறுவது சரியல்ல.

நாட்டில் இளம் வயதினரிடையே மரணத்தின் அபாயங்கள் கொரோனா தடுப்பூசியால் அதிகரிக்கவில்லை. குடும்பத்தை சார்ந்த முன்னோர்களுக்கு இதுபோன்ற திடீர் மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR

கொரோனா தடுப்பூசி காரணமாகத்தான் இளைஞர்களுக்கு மாரடைப்பு நோய் வருகிறது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகியது. இதனால் அண்மையில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் ஐ.சி.எம்.ஆர் விளக்கம் அளித்துள்ளது.

From around the web