வடநாட்டில் ஒரு மொழி தமிழ்நாட்டில் மும்மொழியா? ப.சிதம்பரம் காட்டம்!!
Mar 2, 2025, 07:49 IST

வடநாட்டில் இரு மொழிகள் கூட கற்றுக் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் மும்மொழிக் கொள்கை என்ற் பிரதமர் மோடிக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நான் பல்வேறு வட மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். அங்கிருக்கிற குழந்தைகளுக்கு ஆங்கிலமே தெரியாது. அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்படவே இல்லை. நீங்கள் இரண்டு மொழிகள் கூட கற்றுக்கொடுக்க வில்லை. எந்த முகத்துடன் தமிழ்நாட்டிற்கு முன்றுமொழி என்று வருகிறீர்கள்” என்று ப.சிதம்பரம் காட்டாமாக கேள்வி எழுப்பியுள்ளார்.