பீகார் தேர்தலால் ஒன்றிய அரசுக்கு ஆபத்தா?! பாஜக வை உதறுகிறாரா நிதிஷ் குமார்?

 
Lalu Nitish

2025ம் ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் பாஜவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  சட்டமன்றத் தேர்தலை யார் தலைமையில் நடத்துவது என்பது தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளது.

டெல்லிக்கு சென்று நிதிஷ்குமார் நடத்திய பேச்சுவார்த்தையிலும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இந்தியா கூட்டணிக்கு நிதிஷ்குமார் திரும்பும் நேரம் வந்து விட்டது என்று பீகார் முன்னாள் முதலமைச்சரும் ஒன்றிய முன்னாள் ரயில்வே அமைச்சருமான ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முக்கியத் தலைவர்களில் ஒருவர் தான் நிதிஷ்குமார். பின்னர் இடையில் யூடர்ன் அடித்து பாஜகவுடன் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தார். தெலுகு தேசம் மற்றும் நிதிஷ் குமார் கட்சியின் எம்.பிக்களின் ஆதரவுடன் தான் ஒன்றிய பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கூட்டணி மாறுவதில் பெயர் போன பாமக போல் பீகாரில் அடிக்கடி கூட்டணி மாறுவதில் கை தேர்ந்தவர் நிதிஷ் குமார். 2013ம் ஆண்டு முதல் தற்போது வரையிலும்  4 தடவை கூட்டணி மாறிவிட்டார் நிதிஷ்குமார். இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் அழைப்பை ஏற்று இந்தியா கூட்டணிக்கு நிதிஷ் குமார் திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை நிதிஷ்குமார் கூட்டணி மாறினால் ஒன்றிய அரசுக்கு பெரும்பான்மை எண்ணிக்கை குறைந்து விடும். அதனால் ஆட்சி மாற்றம் அல்லது தேர்தலை நோக்கி நகருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே வேளையில் ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக ஒன்றிய ஆட்சியில் குழப்பம் ஏற்பட பாஜக அனுமதிக்காது என்றும் நம்ப்படுகிறது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் டெல்லி ஆட்சியையும் அசைத்துப் பார்க்கும் ஒன்றாக உருவாகி உள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.

From around the web