இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்.. தென்னை மரத்தில் ஆட்டம் போட்ட இளைஞர்களுக்கு சோகம்..! வைரல் வீடியோ

 
Kerala

கேரளாவில் ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் சிலர் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ வாங்குவதற்காக இன்றைய இளைஞர்கள் செய்யும் செயல்கள் வேடிக்கையாகவும், பரிதாபமாகவும் இருக்கின்றன. ‘லைக்ஸ்’ எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்து விட்டாலே தன்னைத் தானே ‘செலிபிரிட்டி’ ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்ளும் இளைஞர்கள், அதன் பின் சமூக வலைதளமே கதி என ஆகி விடுகின்றனர். எப்போது பார்த்தாலும் செல்ஃபி, ரீல்ஸ் வீடியோ என தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.

அந்த வகையில், தென்னை மரத்தில் இளைஞர்கள் ஏறி சாகசத்தில் ஈடுபடும் போது தென்னை மரம் முறிந்து விழுந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Reels

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காளிகாவு பகுதியில் ஆற்றில் சாய்ந்து நிற்கும் தென்னை மரம் ஒன்றில் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏறி ஆற்றில் குதித்து
சாகசத்தில் ஈடுபடும் நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ரீல்ஸ் செய்வதற்கு ஆசைப்பட்டு வளைந்திருந்த தென்னை மரத்தின் மீது வரிசையாக அமர்ந்திருந்தனர். இதில் கடைசியாக அமர்ந்திருந்த நபர், மரத்தை ஆட்டுவிப்பதற்காக லேசாக அசைத்தார். அடுத்த சில நொடிகளில் எதிர்பாராதவிதமாக தென்னை மரம் முறிந்து விழுந்தது.


கணநேரத்தில் மரத்தின் மீதிருந்த அனைத்து இளைஞர்களும் தண்ணீருக்குள் விழுந்தனர். தண்ணீர் என்பதால் விழுந்த இளைஞர்கள் சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web