இன்ஸ்பெக்டர் மீது பாலியல் வழக்கு.. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

 
Kerala

கேரளாவில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சைஜு. இவர் மீது பெண் டாக்டர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், சைஜு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார்.

Woman-GangRaped-Murdered-In-Rajasthan-Dausa-Arrested

மேலும் சைஜு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த பெண் டாக்டர் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, காவல்துறை பணியில் இருந்து சைஜு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சைஜு தாக்கல் செய்த மனுவை கேரள நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.

dead-body

இந்த நிலையில், எர்ணாகுளம் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேத்கர் ஸ்டேடியம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சைஜுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web