அதிகராக்கும் காய்ச்சல்... பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை... அரசு அதிரடி உத்தரவு!!

 
School

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சிறியவர் முதல் பெரியவர் என அனைத்துத் தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Influenza

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பரிந்துரையுடன் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீசன் அறிகுறி தொடங்குவதற்கு முன் மற்றும் பின் நாட்களில் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நாளை முதல் 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சலைத் தடுக்கும் வகையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மார்ச் 16 முதல் 26-ம் தேதி வரை இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Namashivayam

இந்த நிலையை சமாளிக்க புதுச்சேரி சுகாதாரத்துறை புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியிலும், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலும், காய்ச்சலுக்கான பிரத்யேக வெளிப்புற சிகிச்சையும், உள்புற சிகிச்சை வார்டும் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

From around the web