கடந்த பிறவியில்.. பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த யோகா ஆசிரியர்.. கர்நாடகாவில் பயங்கரம்

 
Karnataka

கர்நாடகாவில் யோகா ஆசிரியர் ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் கேவாலா அறக்கட்டளையை நடத்தி வருபவர் பிரதீப் உல்லால் (54). யோகா ஆசிரியரான இவர், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Woman-GangRaped-Murdered-In-Rajasthan-Dausa-Arrested

வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். முந்தையை பிறவியில் நாம் இருவரும் உறவில் இருந்ததாக கூறி தன்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

அப்பெண் தனது புகாரில், “பஞ்சாப்பை சேர்ந்த நான் 2000 ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தேன். பிரதீப் உல்லால் ஆன்லைனில் நடத்திய யோகா வகுப்புகளில் நான் கடந்த 5 ஆண்டுகளாக கலந்து கொண்டேன். 

Police-arrest

அப்போது நாங்கள் இருவரும் கடந்த பிறவியில் உறவில் இருந்ததாக என்னை நம்ப வைத்து 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் என்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது நான் கருவுற்றேன், பின்னர் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

From around the web