வாரணாசி போல் வளர்ச்சியடைந்தால் இந்தியா வளர்ந்து விடும்!! நிதி ஆயோக் துணைத் தலைவர் பேச்சு!!

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள பழம்பெரும் கல்வி நிறுவனமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் துணைத்தலைவர் சுமன் பெரி, வாரணாசி போல் திட்டங்களை அமல்படுத்தினால் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று கூறியுள்ளார்.
”12 ஆண்டுகளுக்கு முன்பு, வாராணசியில் வளர்ச்சி என்பதை கற்பனை செய்வதே ஒரு பெரிய விஷயமாக இருந்தது. நான் இரண்டாவது முறையாக இந்த நகருக்கு வந்தபோது, வளர்ச்சியுடன் பாரம்பரியமும், கலாச்சாரமும் இங்கு பாதுகாக்கப்படுவதைக் கண்டேன். இப்போது இந்நகரை முன்மாதிரியாக வைத்து நாடு முழுவதும் செயல்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்படுகிறது. வாராணசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவின் தலைநகராக விளங்குகிறது. இது மனித மூலதனத்தை உற்பத்தி செய்யும் ஒரு பெரிய தொழிற்சாலை. இந்த அடிப்படையில், இந்தியாவை மேம்படுத்த ஒரு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
மகா கும்பமேளாவின் பக்தர்களும் இதற்கு மனிதகுலத்தின் மூலதனமாகி உள்ளனர். எனவே, வாராணசி கண்டுள்ள வளர்ச்சியின் மூலம் நம் நாட்டை மேம்படுத்த முடியும். நிதி ஆயோக், மாநிலங்களுக்கு உள்ளூர் உணவுக்காக குரல் கொடுக்கவும், அவர்களின் உள்ளூர் தயாரிப்புகளுக்கான அடையாளத்தை உருவாக்கவும் வாய்ப்பளிக்கிறது” என்று பேசியுள்ளார் சுமன் பெரி.