என் பிள்ளைகள் கஷ்ட படவேண்டாம்.. கொலை வழக்கில் கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்

 
Karnataka

கர்நாடகாவில் பெற்ற குழந்தைகளை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜாலஹள்ளி அருகே போவி காலனியில் 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு 9 வயதில் மகனும், 7 வயதில் மகளும் இருந்தார்கள். அந்த பெண்ணின் கணவர் தனது 7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், கடந்த மாதம் (மார்ச்) ஜாலஹள்ளி போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த தனது மகன், மகளின் முகத்தை தலையணையால் அமுக்கி, மூச்சை திணறடித்து தாய் கொலை செய்தார். இதுகுறித்து அந்த பெண் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து, அந்த பெண்ணை ஜாலஹள்ளி போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையின் போது தனது மகன், மகளை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி போலீசாரிடம் அந்த பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Dead

அதில், பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் எனது கணவர் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறைக்கு சென்றார். அதன்பிறகு, எனது மகன், மகளுடன் தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். அவர்களை வளர்ப்பதற்காக தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றேன். அதன்பிறகும் பணப்பிரச்சினை தொடர்ந்து இருந்தது. 

கணவர் சிறைக்கு சென்ற பின்பு நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன். நான் பட்ட கஷ்டங்களை எனது மகன், மகளும் அனுபவிக்க கூடாது என்று நினைத்தேன். அதனால் தான் 2 பேரையும் கொலை செய்ததாக அந்த பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். அவ்வாறு கூறிய போது அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Police

இதற்கிடையில், கணவர் சிறைக்கு சென்ற பின்பு தாய் வீட்டில் பெண் வசித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் தாய் வேலை விஷயமாக சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இதனால் மகன், மகளுடன் தனியாக இருந்த பெண், 2 பேரையும் கொலை செய்திருப்பதாகவும், பாட்டி வீட்டிலேயே இருந்திருந்தால் 2 குழந்தைகளும் தப்பித்து இருக்கும் என்று தெரியவந்துள்ளது. கைதான பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

From around the web