இனி இதற்கெல்லாம் பயன்படுத்த முடியாது.. ஆதார் கார்டு புதிய மாற்றம்!

 
Aadhar card

ஆதார் கார்ட்டை இனி சில விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாத வண்ணம் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்களின் முக்கியமான அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளது. ஓட்டுநர், உரிமம் பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது, வாக்காளர் அடையாள அட்டை பெற, வங்கி கணக்கு தொடங்க, வருமான வரி தாக்கல் செய்ய, அரசின் நலத்திட்ட உதவிகள் பெற என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

Aadhar card

இந்த நிலையில் ஆதார் கார்ட்டை இனி சில விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாத வண்ணம் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, ஆதார் கார்டு மூலமாக இந்திய குடிமக்களின் பிறந்த தேதி, முகவரியை சரிபார்க்க முடியாது. மேலும், எந்த நிறுவனங்களிலும் இனி பிறந்த தேதி, முகவரி சரிபார்ப்பிற்காக ஆதார் கார்டு ஒப்படைத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது. இதற்கு பதிலாக கட்டாயமாக பிறந்த தேதிக்கு பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி மதிப்பெண் சான்றிதழை ஒப்படைக்கலாம். அதே போல, முகவரி சான்றுக்கு குடியுரிமை சான்றிதழை ஒப்படைக்க வேண்டும்.

Aadhar card

முன்னதாக பிறப்புச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு ஆதார் அட்டையைக் காட்ட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web