மனைவியின் கள்ளக்காதலனை கல்லால் அடித்து கொலை செய்த கணவன்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

 
Andhra

ஆந்திராவில் மனைவியின் கள்ளக்காதலனை கண்வன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் புலிச்செர்ல மண்டலம் எல்லம்கிவாரிபள்ளி பஞ்சாயத்து கோபாலபுரம் எஸ்.டி காலனியை சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மனைவி ராணி. கணவருடன் ஏற்பட்ட தகராறில் ராணி திருமலைக்கு சென்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது அதே ஓட்டலில் பணிபுரியும் கர்னூல் மாவட்டம் இந்திரம்மா காலனியை சேர்ந்த ஜெயானந்தபால் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.

Murder

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த சந்திரய்யா, அவர்களின் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டார். அதற்காக ஜெயானந்தபாலை கொலை செய்ய திட்டமிட்டு அவரை சித்தூர் மாவட்டம், கல்லூருக்கு அழைத்து வந்தார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது போதையில் இருந்த ஜெயானந்தபாலை, சந்திரய்யா பாறாங்கல்லால் தலையில் அடித்து கொலை செய்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

Police-arrest

இதற்கிடையே தான் கொலை செய்தது குறித்து கல்லூர் கிராம வருவாய் அதிகாரி ராஜசேகர நாயக்கிடம் சந்திரய்யா தகவல் தெரிவித்துளளார். உடனடியாக அவரை பிடித்து காவல் நிலையைத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததனர்.

From around the web