சேலை வாங்கி தராத கணவர்.. ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை.. கதறும் பிள்ளைகள்!

 
Jharkhand

ஜார்கண்ட்டில் கணவர் புதிய சேலை வாங்கி தராததால் அதிருப்தியடைந்த இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள பாக்ஜோபா கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தோ தேவி (26). இவரது கணவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

Train

இந்த நிலையில் தசராவை முன்னிட்டு செந்தோ தேவி, தன்னுடைய கணவரிடம் புதிய சேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரால் சேலை வாங்கி தர முடியவில்லை. இதனால் மனமுடைந்த செந்தோ தேவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Police

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் புதிய சேலை வாங்கி தராததால் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

From around the web