அசாம் கோவிலில் நரபலி பூஜை.. சாதுக்களிடம் சிக்கி பலியான அப்பாவி பெண்!!

 
Assam

அசாமில் உள்ள கோவிலில் 64 வயது மூதாட்டியை நரபலி கொடுத்தது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்றும் அந்த மூதாட்டியின் தலையை வெட்டி நரபலி கொடுத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட மூதாட்டியின் பெயர் சாந்தி ஷா என்றும் 12 பேர் அவரை கொல்ல திட்டமிட்டிருந்தனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலில் இந்த நரபலிக் கொடூரம் நிகழ்ந்துள்ளது என்றார் அந்நகரத்தின் காவல் ஆணையர் திகந்தா பராஹ். “மொத்தம் 12 பேருக்கு இப்படுகொலைச் சம்பவத்தில் தொடர்புள்ளது. தற்போது ஐந்து பேர் மட்டுமே கைதாகி உள்ளனர்.

Sacrifice

“52 வயதான பிரதீப் பதக் என்பவரின் சகோதரர் இறந்துவிட்டார். நரபலி கொடுத்தால் அவரது ஆன்மா சாந்தியடையும் என பிரதீப் நம்பியுள்ளார். இதையடுத்து மூதாட்டியை நரபலி கொடுத்துள்ளனர்,” என்று காவல் ஆணையர் திகந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2019-ம் ஆண்டிலேயே மூதாட்டி கொல்லப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம்தான் அவரது உடல் கிடைத்தது. அதன் பிறகே இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது என்றும் குற்றவாளிகள் சிக்கினர் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

Police-arrest

இதையடுத்து மார்ச் 25-ம் தேதி தொடங்கி ஏப்ரல் முதல் தேதிக்குள் அடுத்தடுத்து ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். கோவிலில் வைத்து மூதாட்டி ஒருவர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அசாம் மாநில மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த மாதேஸ்வரி கிரி என்ற 50 வயதான மாதா பிரசாத் பாண்டே, உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த பிரதீப் பதக் என்ற தினேஷ் என்கிற ராஜு (52), சுரேஷ் பாஸ்வான் (56), கானு ஆச்சார்ஜி என்ற கனு தந்திரிக் (62), பயாராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மௌரியா என்ற ராஜு பாபா (60) என்பவர் கவுகாத்தியில் கைது செய்யப்பட்டார்.

From around the web