அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.. காத்திருக்கும் 3 பம்பர் பரிசுகள்!

 
Govt-office

அகவிலைப்படி உயர்வு, பயணப்படி உயர்வு மற்றும் மத்திய ஊழியர்களுக்கான HRA திருத்தம் ஆகிய மூன்றும் அடுத்த மார்ச் மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி உள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை கவரும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை எடுக்கலாம். ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 50 சதவீதம் அதிகரிக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது அதன் அறிவிப்புக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். இது அறிவிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு மேலும் இரண்டு நல்ல செய்திகள் உறுதி செய்யப்படும்.

முதலாவதாக, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு (DA) பரிசாக வழங்கப்படும். இருப்பினும், இதற்கு மார்ச் 2024 வரை காத்திருக்க வேண்டும். ஜூலை முதல் நவம்பர் 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் இப்போது ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. நவம்பர் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வந்துவிட்டன. டிசம்பர் எண்கள் இன்னும் வரவில்லை. அகவிலைப்படியில் இதுவரை 4 சதவீதம் உயர்வு காணப்பட்டுள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 46 சதவிகித அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஏஐசிபிஐ தரவைப் பார்த்தால், அகவிலைப்படியின் மதிப்பெண் 49.68 சதவீதத்தை எட்டியுள்ளது. குறியீடு தற்போது 139.1 புள்ளிகளில் உள்ளது.

Salary-hike

இரண்டாவது பரிசு பயணப்படியாக (Travel Allowance) இருக்கும். டிஏ அதிகரிப்புடன், பயணப்படியும் (TA) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பயணக் கொடுப்பனவை ஊதியக் குழுவுடன் இணைப்பதன் மூலம், டிஏ அதிகரிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். பயணக் கொடுப்பனவு வெவ்வேறு ஊதியக் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர் TPTA நகரங்களில், கிரேடு 1 முதல் 2 வரையிலான பயணக் கொடுப்பனவு ரூ.1,800 மற்றும் ரூ.1,900 ஆகும். கிரேட் 3 முதல் 8 வரை ரூ.3,600 + டி.ஏ. அதேசமயம், மற்ற இடங்களுக்கு இந்த விகிதம் ரூ. 1,800 + டி.ஏ ஆக உள்ளது.

மூன்றாவது மற்றும் மிகப்பெரிய பரிசு வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வடிவத்தில் பெறப்படும். இதிலும் மறுசீரமைப்பு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. HRA வில் அடுத்த திருத்த விகிதம் 3 சதவீதமாக இருக்கும். 7 வது ஊதியக்குழு (7th Pay Commission) பரிந்துரையின் படி அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டினால் அதில் திருத்தம் இருக்கும். தற்போது HRA நகரங்களின் வகைகளின் அடிபப்டையில் 27, 24, 18 சதவீதம் என வழங்கப்படுகிறது. நகரங்கள் Z, Y, X வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்ந்தால், HRA 30, 27, 21 சதவீதமாக உயரும்.

Govt office

அகவிலைப்படி உயர்வு, பயணப்படி உயர்வு மற்றும் மத்திய ஊழியர்களுக்கான HRA திருத்தம் ஆகிய மூன்றும் அடுத்த மார்ச் மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, மத்திய அரசாங்கம் (Central Government) மார்ச் மாதம் ஜனவரி முதல் அகவிலைப்படியை அறிவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், எவ்வளவு அகவிலைப்படி வழங்கப்படும் என்பது மார்ச் 2024 இல் தான் தெரிய வரும். டிஏ 50 சதவீதத்தைத் தாண்டினால், எச்ஆர்ஏவில் 3 சதவீதம் திருத்தம் செய்யப்படும். அதே நேரத்தில், தரத்திற்கு ஏற்ப பயணக் கொடுப்பனவு அதிகரிக்கப்படலாம்.

From around the web