தாயை மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற கொடூர மகன்கள்.. திரிபுராவில் அதிர்ச்சி சம்பவம்

 
Tripura

திரிபுராவில் குடும்ப பிரச்சினை காரணமாக பெற்ற தாயை மகன்களே மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

திரிபுரா மாநிலம் மேற்கு திரிபுரா மாவட்டம் கம்பரி பகுதியை சேர்ந்த 62 வயது பெண் ஒருவர் தனது 2 மகன்களுடன் வாழ்ந்து வந்தார். அப்பெண்ணின் கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால் மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

Tripura

இந்த நிலையில், தாயாருக்கும் அவரது 2 மகன்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 மகன்களும் பெற்ற தாயை வீட்டின் அருகே உள்ள மரத்தில் கட்டி வைத்து உயிரோடு தீ வைத்து எரித்துக்கொன்றனர்.

Police

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாயை தீவைத்து எரித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய 2 மகன்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பெயர் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.   

From around the web