குஜராத்தில் கோர விபத்து.. 2 பேருந்துகள் இடையே சிக்கி ஒருவர் பலி.. 7 பேர் படுகாயம்.. சிசிடிவி வீடியோ!

 
Surat

குஜராத்தில்  2 பேருந்துகள் இடையே சிக்கிய 4 இருசக்கர வாகனங்கள் நசுங்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் முன் செல்லும் பேருந்து ஒன்றினை பின்தொடர்ந்து 4 இருசக்கர வாகனம் விரைந்தபோது விபத்து நேரிட்டது. முன்சென்ற பேருந்து திடீரென பிரேக் போட்டபோது, அதனை எதிர்பாரதவிதமாக 4 இருசக்கர வாகனங்களும் பேருந்தின் பின்பக்கமாக மோதின.

Accident

அதே நேரம் அடுத்து விரைந்து வந்த இன்னொரு பேருந்தும், முன்சென்ற பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு பேருந்துகளுக்கும் இடையே 4 இருசக்கர வாகனங்களும் சிக்கி நசுங்கின. தலா இருவர் என 4 இருசக்கர வாகனங்களிலும் பயணித்து வந்த 8 பேர், இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கி படுகாயமடைந்தனர்.

இந்த கோர விபத்தில் பிகா சோனவானே (48) என்ற நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முன்சென்ற பேருந்து, ஆட்டோ ஒன்றின் மீதான மோதலை தவிர்ப்பதற்காக திடீர் பிரேக் போட்டதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.


போதிய இடைவெளிவிட்டு பேருந்தினை பின்தொடராத 4 இருசக்கர வாகனங்களும் விபத்துக்கு ஆளாகி உள்ளன. இவற்றைவிட கட்டுப்பாடில்லாத வேகத்தில் அடுத்து வந்த 2வது பேருந்தும், சாதாரண விபத்தை கோர விபத்தாக மாற்றியுள்ளன. இதனால் சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயன்ற இரண்டாவது பேருந்தின் ஓட்டுநரை பொதுமக்களே பிடித்து போலீசார் வசம் ஒப்படைத்துள்ளனர்.

From around the web