நள்ளிரவில் நடந்த கோர சம்பவம்! மகாராஷ்டிராவில் பேருந்து எரிந்து 25 பேர் பலி!!

 
Maharashtra

மகாராஷ்டிராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து தனியார் டிராவல்ஸ் பேருந்து ஒன்று 33 பயணிகளுடன் புனே நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நள்ளிரவில் புல்தானா மாவட்டம் சிந்த்கத்ராஜா அருகே சம்ருத்தி விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் உரசி, தடுப்புகளில் மோதி கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. 

விபத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கிவிட்டது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் உடடியாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து 8 பேரை காப்பாற்றியுள்ளனர். சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பேருந்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

Maharashtra

விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “பஸ் வலதுபுறத்தில் இருந்த மின் கம்பத்தில் முதலில் மோதியது. இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார். பின்னர் டிவைடரில் மோதி பஸ் இடதுபுறமாக கவிழ்ந்துவிட்டது. அதாவது கதவு உள்ள பகுதி ரோட்டில் சாய்ந்துவிட்டது. இதனால் மக்கள் உடனடியாக அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். மட்டுமல்லாது ரோடு முழுவதும் டீசல் பரவியதால் உடனடியாக பஸ் தீப்பற்றிக்கொண்டது. எனவே எங்களாலும் மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை” என்று கூறியுள்ளனர்.

விபத்து குறித்து புல்தானா எஸ்பி சுனில் கடசேனே கூறுகையில், “இந்த விபத்து நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்திருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் டயர் வெடித்ததால்தான் பஸ் கட்டுப்பாட்டை இழந்ததுள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர் டிவைடரில் மோதியதால் சாலையில் கவிழ்ந்துள்ளது. இதில் டீசல் டேங்கிலிருந்து டீசல் வெளியேறியதுதான் இந்த தீ விபத்துக்கு காரணம். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள்” என்று கூறியுள்ளார்.


உயிரிழந்தவர்களின் உடல்கள் கருகியுள்ளதால் அதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட் டிரைவர் உட்பட 8 பேர் புல்தானா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து மகாராஷ்டிரா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web