கன்னடத்தில் பேசி மன்னிப்பு கேட்ட இந்தி வெறியர்...

 
Kannada Kannada

பெங்களூரு நகரில் ஆட்டோக்காரர் ஒருவரிடம் சண்டை போட்டு பெங்களூரு என்றாலும் இந்தியில் தான் பேச வேண்டும் என்று பேசிய வட இந்தியர் ஒருவரின் வீடியோ சமூகத்தளத்தில் வைரலானது. இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரவலான கோரிக்கைகள் கர்நாடாக அரசுக்குச் சென்றது. கன்னட மொழி அமைப்புகளும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து நடவடிக்கை கோரினார்கள்.

இந்நிலையில் ஆவேசமாக இந்தி மொழியில் சண்டை போட்ட வட இந்தியர், மிகவும் அமைதியான தொணியில் கன்னடத்தில் பேசி மன்னிப்பு கேட்ட வீடியோவும் சமூகத்தளத்தில் பரவி வருகிறது. 9 ஆண்டுகளாக பெங்களூருவில் வசிப்பதாகவும், பெங்களூரு தான் தனக்கு வாழ்வாதாரம் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார் இந்த இந்தி வெறி ஆசாமி.

பயபுள்ளைக்கு குடிவெறியில் இந்தி மொழி வெறியும் ஏறிடுச்சோ? போதை தெளிந்ததும் புத்தி வந்துடுச்சி போல..


 

From around the web