கர்நாடகாவிலும் இந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிப்பு!!

 
Karnataka

தமிழ்நாடு முதலமைச்சர் இந்தித் திணிப்புக்கு எதிராக எழுப்பிய குரல் இந்தியா முழுவதிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் முதலமைச்சரின் குரல் கேட்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் திமுக மாணவர், இளைஞர் அணியினர் ஒன்றிய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த கருப்பு மை பூசி இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் கர்நாடகாவிலும் தொடங்கியுள்ளது.

சமீப காலமாக கர்நாடகா மாநிலத்தில் வங்கிகளில் இந்தி மட்டுமே பேசுபவர்களால் பிரச்சனை கிளம்பியது. மேலும் இந்தியைத் திணித்து கன்னட மொழியை அழிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் வலுத்து வருகிறது. பள்ளிப் பொதுத்தேர்வில் இந்திப்பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சர் மது பங்காராப்பாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்நிலையில் கன்னட மொழி ஆதரவாளர்கள் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழிக்கும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இந்தி எழுத்துக்களை அழித்து விட்டு கன்னடா என்று எழுதி வருகின்றனர்.


 

From around the web