அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு.. இந்திய வானிலை மையம் தகவல்

 
Foggy Foggy

அடுத்த 2 நாட்களுக்கு 5 மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இரண்டு மாநிலத்திலும் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்து குடிநீர், மின்சாரம் வழங்கப்படாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.

Rain

இந்த நிலையில் வலுவிழந்த மிக்ஜாம் புயல் தற்போது ஜார்கண்ட் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைக்கொண்டு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Foggy

அதே சமயம் வட இந்திய மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் இன்றும், நாளையும் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web