இமாச்சல பிரதேசத்தில் கனமழை எதிரொலி.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

 
Himachal Pradesh

கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாசல பிரதேச மாநிலத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை கொட்டி வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை, வெள்ளம் காரணமாக 121 சாலைகள் மூடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

HP

இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக இன்று (ஆகஸ்ட் 14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த முதுகலை மற்றும் பி.எட். தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

school

இந்த பருவமழை காலத்தில் இதுவரை 231 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6,731 கோடி ரூபாய் அளவுக்கு  கனமழையால் உடமைகள் சேதமடைந்துள்ளன என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

From around the web