வெளுத்து வாங்கும் கனமழை.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. முதல்வர் அறிவிப்பு!

 
Delhi

தொடர் கனமழை காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று கனமழை பெய்தது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 153 மிமீ மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 2 முதல் 3 நாட்கள் வரை டெல்லியில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் டெல்லியின் பல பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Delhi

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசுத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, நிவாரண பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஜாகிரா பகுதியிலிருந்த பழங்கால கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், இருவர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் பலர் பலியாகி உள்ளனர். டெல்லியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து முதியவர் பலியாகியுள்ளார். மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Arvind-Kejriwal

இந்நிலையில் கனமழை குறித்து வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

From around the web