சூப்பர் நியூஸ்!!  தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!!  

 
Jaishankar Jaishankar

இந்தியாவிலேயே  தமிழ்நாட்டில்  தான் தனிநபர் வருமானம் அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. 

சென்னை தேனாம்பேட்டை யில் செய்தியாளர்களை முதன்மை கணக்காய்வு தலைவர் ஜெய்சங்கர் சந்தித்தார்.
அப்போது அவர், "தேசிய சராசரியை  விட தமிழ்நாட்டில்  தனி நபர் வருமானம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் ஜிடிபி யும் உயர்ந்துள்ளது.இந்தியப் பொருளாதாரத்திற்கு தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது"  என்று கூறியுள்ளார் 

2021 ம் ஆண்டு முதளமைச்சர் மு. க.  ஸ்டாலின் தலைமையில்  திமுக ஆட்சி வந்த பிறகு அனைத்து குறியீடுகளிலும் தமிழ்நாடு முன்னணியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது 

From around the web