இலவச கேஸ் சிலிண்டர் அரசு அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்!!

 
Gas

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர்களை எப்படி பெறுவது என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு கேஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது.

Gas

இது ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் முதல் சமூக நலத் திட்டமாகும். சேமிப்புக் கணக்குகளைத் திறப்பதற்கான ஜன்தன் யோஜனா, சுகன்யா சம்ரிதி கணக்குகள் போன்ற மற்ற அனைத்துத் திட்டங்களும் இன்றுவரை உள்ளன.

தற்போது எப்படி இலவச கேஸ் இணைப்புகளை பெறலாம் என்பதை பார்க்கலாம். முதலில், அருகிலுள்ள LPG விற்பனை நிலையத்திற்கு சென்று இலவச கேஸ் சிலிண்டருக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் இந்த இலவச கேஸ் இணைப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

Gas

இதற்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சேமிப்பு கணக்கு பாஸ்புக், வங்கி கணக்கு அறிக்கை, இருப்பிட சான்று, பிபிஎல் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களை எடுத்து செல்லவும். இந்த முக்கிய ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை இன்டேன், பாரத் கேஸ் அல்லது இந்துஸ்தான் பெட்ரோலியம் தனியார் நிறுவன கேஸ் விற்பனை நிலையத்தில் ஒப்படைத்தால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

From around the web