மதுவுக்கு அடிமையான ஆடு... தினமும் உரிமையாளரிடம் மது அருந்தும் ஆடு.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

 
Telangana

தெலுங்கானாவில் விவசாயி ஒருவர் ஆடு ஒன்றிற்கு மது புகட்டப்படும் வீடியோ காண்போரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள மொடுகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்தர் ரெட்டி. விவசாயியான இவர், தனது விவசாய நிலத்தில் மது அருந்திக் கொண்டிருந்தார். 

Goat

அப்போது அருகில் வந்த அவருடைய வளர்ப்பு ஆடு ஒன்றுக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்தார். மதுவை குடித்த அந்த ஆடு எப்போதெல்லாம் ரவீந்திர ரெட்டி மது குடித்தாலும் அவர் அருகில் வந்து நிற்பதை வழக்கப்படுத்தி கொண்டது. 

ரவீந்திர ரெட்டியும் அந்த ஆட்டுக்கு தொடர்ந்து மது வாங்கிக் கொடுக்கிறார். தினமும் அந்த ஆடு மதுவை குடித்து தள்ளாடி வருவதைக் கண்டு அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விவசாயி ரவீந்தர் ரெட்டி தான் மது அருந்தும் போதெல்லாம் தான் வளர்க்கும் ஆட்டிற்கும் மது ஊற்றிக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம், அந்த மதுவைக் குடித்துப் பழகிய ஆடு, தற்போது மதுவுக்கு அடிமையாகி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web