கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள் மரணம்.. அடுத்த சில நாட்களிலேயே சிறுமியின் தந்தை மரணம்!

 
UP

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அந்த சிறுமிகளில் ஒருவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கடம்பூர் பகுதியில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளையில் 2 மைனர் சிறுமிகள் வேலை செய்து வந்தனர். இந்த சிறுமிகளை சில நாட்களுக்கு முன்பு, செங்கல் சூளையின் காண்டிராக்டர் ராம்பூர் நிஷாத் (48), அவரது மகன் ராஜூ (18) மற்றும் மருமகன் சஞ்சய் (19) ஆகிய 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் இந்த செயலை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து 2 சிறுமிகளையும் மிரட்டி வந்துள்ளனர். இதனால் சிறுமிகள் இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், செங்கல் சூளையில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு மரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி சிறுமிகள் 2 பேரின் உடல்களும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

Rape

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 நபர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்த போலீசார், குற்றவாளிகள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், 2 சிறுமிகளில் ஒருவரின் தந்தை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி தீக்சா சர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, அவரின் உடல் நேற்று மதியம் மீட்கப்பட்டது. அவருடைய வீட்டில் இருந்து 2 கி.மீ.க்கு குறைவான தொலைவில் ஹமியுர்பூர் பகுதியருகே அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. வழக்கம்போல் நடைபெறும் பிரேத பரிசோதனைக்கு பின்னர், குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் முன்னிலையில் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடந்தன என கூறினார்.  

Kanpur

எனினும், அவருடைய மகன் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கான்பூரில், செங்கல் சூளையில் வேலை செய்து வந்த சிறுமிகளை, கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்து, மயக்கி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்த சம்பவத்தில் சிறுமிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், ஒரு வாரத்திற்குள் அவர்களில் ஒருவரின் தந்தையின் உடலை தூக்கு போட்ட நிலையில் போலீசார் மீட்டது மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரும் அடித்து, தாக்கி தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web