காதலிக்கு பிறந்தநாள் கேக் ஊட்டி விட்டு கழுத்தறுத்து கொலை.. காதலன் வெறிச்செயல்!! கர்நாடகாவில் கொடூரம்!!

 
Bengaluru

கர்நாடகாவில் காதலன் வீட்டில் பிறந்தநாள் கொண்டிய காதலியின் கழுத்தறுத்து கொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கனகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நவ்யா (24). பெங்களூரு பகுதியில் வசித்து வரும் இவர், மாநில காவல்துறையின் உள்பாதுகாப்பு பிரிவில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கனகபுரத்தில் வசிக்கும் பிரசாந்த் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் துரத்து உறவினர்கள்.

இவர்களது விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இதற்கிடையில், நவ்யாவுக்கு வேறு சில பையனுடன் தொடர்பு இருப்பதாக பிரசாந்த் சந்தேகப்பட்டார். இது தொடர்பாக இருவருக்கும் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் இந்த சந்தேகம் பிரசாந்தின் மனதில் நீங்கவில்லை. இதனால் நவ்யாவை கொல்ல திட்டம் தீட்டினார். 

murder

இந்த நிலையில், நவ்யா கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார், ஆனால் பிரசாந்த் பிஸியாக இருப்பதாகக் கூறி அதில் கலந்து கொள்ளவில்லை. பின்னர் நவ்யாவின் பிறந்தநாளிலேயே ஏன் கொல்லக்கூடாது என்று நினைத்த பிரசாந்த், பிறந்தநாளை ஒன்றாக கொண்டாட விரும்புவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். நவ்யா சம்மதித்து அவன் வீட்டிற்கு வந்தாள். அங்கே பிரசாந்த் அறை முழுவதையும் அழகாக அலங்கரித்திருந்தார். 

முதலில் பிறந்தநாள் கேக்கை வெட்ட நவ்யாவை அழைத்துச் சென்றார். பின்னர் சமையலறையில் இருந்து கத்தியை கொண்டு வந்து கழுத்தை அறுத்து கொன்றார். கொலையை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மறுபுறம், நவ்யா வீட்டிற்கு வராததால், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, ​​பிரசாந்த் வீட்டில் அவரது செல்போன் சிக்கனல் காட்டியது.

Bengaluru

பிரசாந்தின் வீட்டிற்கு சென்றபோது, ​​அங்கு நவ்யாவின் சடலம் கிடந்தது. உடனடியாக சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தலைமறைவான பிரசாந்த்தை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

From around the web