பிகினியில் ஓடும் பேருந்தில் ஏறிய இளம்பெண்.. பதறிய பொதுமக்கள்... வைரல் வீடியோ!
டெல்லி பேருந்தில் பிகினி உடையுடன் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ள சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபக காலமாக வித்தியாசமான உடைகளை அணிவது அதிகரித்து வருகிறது. அதுவும் பொதுவெளியில் வித்தியாசமான உடையில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதை மெட்ரோ நகரங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது. சில நாட்களுக்கு முன்னர், டெல்லி மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் உள்ளாடைகளுடன் பயணித்த சம்பவம் விவாதங்களை கிளப்பியிருந்தது. அந்த வரிசையில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லியில், கூட்டம் நிரம்பி வழிந்த பேருந்தில் பிகினி உடை அணிந்த இளம்பெண் ஒருவர் ஏறியிருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பேருந்தில் இருந்த சகபயணி ஒருவர் பேருந்தின் கதவருகே நின்றிருந்த அவரை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவரது உடையைப் பார்த்து திகைத்து அருகில் இருந்த ஒரு பெண் பயணி அவரிடமிருந்து விலகிச் செல்கிறார். பின்னர், அந்தப் பெண்ணின் முன் அமர்ந்திருந்த மற்றொரு பயணியும் தனது இருக்கையை விட்டு வெளியேறுகிறார்.
दिल्ली की बसों की व्यवस्था पूरी तरह से बदहाल हो चुकी हैं ।
— Delhi Buses (@DELHIBUSES1) April 17, 2024
दिल्ली मैट्रो से ज्यादा असुरक्षित हैं दिल्ली की बसें ।
यह तो एक छोटी सी घटना हैं हर रोज़ सैकड़ो लोगों की बसों में जेब कट रही हैं उसका जिम्मेदार कोन हैं....?#delhi #DelhiMetro #bus #DTC #CLUSTER #aap #BJP@kgahlot pic.twitter.com/FzEe26UuCe
மேலும், டெல்லி காவல்துறையை இந்த வீடியோவில் டேக் செய்திருக்கும் நெட்டிசன்கள் இந்தபெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு, இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. அதாவது, நாக்பூர் சாலையில் நள்ளிரவு 2 மணியளவில் நிர்வாணமாக ஒரு நபர் தனது ஸ்கூட்டரில் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.