சட்னியில் கிடந்த தவளை.. பசிக்கு வடை வாங்கியவர் அதிர்ச்சி!

 
Kerala

கேரளாவில் வடைக்கு வழங்கிய சட்டினியில் தவளை இறந்து கிடந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஷோரனூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பயணி ஒருவர் இரண்டு வடை வாங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த வடையை சாப்பிட முயன்றபோது, வடைக்கு வழங்கிய சட்னியில் தவளை இறந்து கிடந்ததை கண்டு அந்த பயணி அதிர்ச்சி அடைந்தார்.

Frog

இதுகுறித்து உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த கடையில் சோதனை நடத்தினர்.

சோதனையைத் தொடர்ந்து ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web