இலவச LPG சிலிண்டர்.. ஹோலி பண்டிகையை ஓட்டி மக்களுக்கு கிடைத்துள்ள செம பரிசு!

 
gas

ஹோலி பண்டிகை தினத்தை ஒட்டி, யோகி ஆதித்யநாத் அரசு 2 கோடி உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர்களை வழங்க உள்ளது.

ஏழை எளிய மக்கள் இலவசமாக சமையல் சிலிண்டர் கேஸ் இணைப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டம் தான் ‘பிரதமர் உஜ்வாலா’ திட்டம். இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ம் தேதி அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டப்படி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பட்டியல் இனத்தவர்கள், எஸ்டி பிரிவினருக்கு இலவசமாக சமையல் கேஸ் இணைப்பு ஒன்றிய அரசால் வழங்கப்படுகிறது.

gas

இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் ஒன்றுக்கு அரசு 300 ரூபாய் மானியமாக வழங்குகிறது. இந்த மானியம் 31 மார்ச் 2025 வரை கிடைக்கும். இந்தத் திட்டத்தில், குடும்பம் ஒரு வருடத்தில் மானிய விலையில் 12 சிலிண்டர்களைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் இதுவரை நாட்டில் 9 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு இலவச எரிவாயு கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஹோலி பண்டிகை தினத்தை ஒட்டி, யோகி ஆதித்யநாத் அரசு 2 கோடி உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர்களை வழங்க உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி, யோகி அரசாங்கம் இந்த பரிசை அறிவித்தது. அதன் படி, உத்திர பிரதேச அரசு, ஆண்டுக்கு இரண்டு முறை, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர்களை வழங்கும். தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையை ஒட்டி, இந்த பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். 

Gas

இதன் மூலம் மாநிலத்தில் உள்ள சுமார் 2 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்திற்காக யோகி அரசு ரூபாய் 2312 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோலி தவிர, தீபாவளிக்கும் முன்னதாகவும், உஜ்ஜவலா திட்ட பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர்களையும் அரசாங்கம் வழங்கும்.

From around the web