கார் மோதி 4 வயது சிறுமி பலி.. வீட்டின் முன் சைக்கிள் ஓட்டி வந்தபோது நிகழ்ந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ!

 
Gujarat

குஜராத்தில் கார் மோதியதில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மெஹ்சானா பகுதியில் திஷா பட்டேல் என்ற 4 வயது சிறுமி, ஸ்பர்ஷ் வில்லா சொசைட்டி வளாகத்தில் சைக்கிள் ஓட்டுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளன. சிறிது நேரம் கழித்து, அவர் முன்னே ஒரு கார் வந்தது.

Dead

காரை பார்த்த சிறுமி சமநிலையை இழந்து சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். ஆனால் சுதாகரித்து எழுவதற்குள், அந்த கார் அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளன.


சிறுமியின் மீது கார் மோதியவுடன் காரை நிறுத்திவிட்டு இறங்கிய ஓட்டுநர் சிறுமியை பார்க்க வெளியே வருகிறார். அதற்குள் சிறுமி உயிரிழந்து விட்டார். கார் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web