கர்நாடகாவில் ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி.. குளிக்க சென்ற போது நிகழந்த சோகம்

 
Karnataka

கர்நாடகாவில் ஏரியில் குளிக்க சென்ற சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள  முட்டிகே கிராமத்தை சேர்ந்த ஜீவன் (13), சாத்விக் (11), விஷ்வா (12), பிருத்வி (12) ஆகிய 4 சிறுவர்களும் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக திம்மனஹள்ளி ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு குளித்து கொண்டிருக்கும்போது ஒரு சிறுவனின் கால் சேற்றில் சிக்கிக்கொண்டுள்ளது.

water

அவரை காப்பாற்றும் முயற்சியில் ஒருவர் பின் ஒருவராக சென்ற சிறுவர்களும் சேற்றில் சிக்கி நீந்த உயிரிழந்தனர். இந்த தகவலை மீதமிருந்த ஒரு சிறுவன் அக்கம் பக்கத்தினரிடம் கூறியபோது, சிறுவன் பொய் சொல்கிறான் என்று எண்ணி அலட்சியமாக அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து தனது சிறுவர்களை காணவில்லை பெற்றோர்கள் தேடியுள்ளனர். அப்போது மீதமிருந்த சிறுவன் தனது கிராமமான முட்டிகேவிற்கு சென்று பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து சென்று பார்த்தபோது சிறுவர்கள் உயிரிழந்திருப்பது உறுதியானது.

Karnataka

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் உயிரிழந்த 4 சிறுவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தமாய் விளையாடி குளிக்க சென்ற சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web