தெற்கை மிரட்டாமல் வடக்கே கவனம் செலுத்துங்க... பி.டி.ஆர் பளிச்!!

 
PTR

தென் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளை மிரட்டுவதை விட்டு விட்டு, வட மாநிலங்களின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துங்கள் என்று தமிழ்நாடு ஐடி துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பி.டி.ஆர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு மாநிலங்களில் மக்களின் தனி நபர் வருமானத்தை பெருக்க வேண்டும். இல்லையென்றால் நாட்டிற்கு எதிர்காலமே இல்லை. நாங்கள் மாநில அரசாங்கம். வடக்கு மாநிலங்களின் பிரச்சனைகளை எங்களால் சரி செய்ய முடியாது. இது திமுக அல்லது தமிழ்நாட்டிற்கான விவகாரம் இல்லை.தென்னிந்தியாவுக்கான விவகாரமும் இல்லை. இந்தியாவின் நல்லதொரு எதிர்காலத்திற்காக வடக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் பி.டி.ஆர் கூறியுள்ளார்.