ராம நவமி கொண்டாட்டத்தில் தீ விபத்து.. பற்றி எரிந்த கோயில்.. பரபரப்பு காட்சி!!

ஆந்திராவில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தனகு மண்டலத்தில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின் போது ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் நடந்தது.
தனகு மண்டலம் துவாவில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் ஸ்ரீராமநவமி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. கோடைக் காலம் என்பதால் பக்தர்களின் வருகைக்காக பனை ஓலை கொண்டு நிழற்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென பந்தல் தீப்பற்றி எரிந்தது.
அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்ற நிலையில் தீயானது கோவில் முழுவதும் பரவியது. இதனால் கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினை சேர்ந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
Fire breaks out during #SriRamNavami celebration at Venugopala Swamy Temple in Duva village under Tanaku Mandal of West Godawari dist. No casualty was reported in the accident. #AndhraPradesh pic.twitter.com/CZNBtg1Hk2
— Ashish (@KP_Aashish) March 30, 2023
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.