மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை.. செல்போனுக்கு அடிமையானதால் விபரீதம்!

 
Karnataka

கர்நாடகாவில் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்த தனது மகனை தந்தையே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் பன்னிமண்டபப் பகுதியை சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா. இவரது மகன் உமைஸ் (22). வீட்டிலேயே இருந்த உமைஸ், எப்போதும் செல்போனே கதியென்று இருந்ததாக தெரிகிறது. இதனை, அவரது தந்தை அஸ்லாம் பாஷா கண்டித்துள்ளார். ஆனாலும், உமைஸ் கேட்காமல் செல்போனில் தொடர்ந்து கேம் விளையாடி வந்துள்ளார்.

Murder

இதனால் தந்தை - மகன் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மகனின் செல்போனை, தந்தை பிடுங்கி வைத்துக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 29-ம் தேதி புதன்கிழமை மீண்டும் உமைஸ் தனது தாயின் செல்போனில் கேம் விளையாடியுள்ளார். இதனை பார்த்த அஸ்லாம் பாஷா கடுமையான கோபமடைந்துள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அஸ்லாம் திடீரென கத்தியை எடுத்து மகனைக் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த உமைஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

Police-arrest

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உமைஸின் சடலத்தை தனியார் மருத்துவமனையில் இருந்து பெற்று, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை அஸ்லாம் பாஷைவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web