செல்போனில் கேம் விளையாட தந்தை எதிர்ப்பு.. 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.!!

 
Game

மகாராஷ்டிராவில் சிறுவன் மொபைல் போனில் கேம் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் மலாட் மல்வானி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மொபைல் போனில் விளையாடும் வழக்கம் கொண்டிருந்துள்ளான். இதனை கவனித்த அந்த சிறுவனின் தந்தை தொடக்கத்தில் கவனிக்காமல் விட்டபோதும், சிறுவன் அதற்கு அடிமையாகும் அளவுக்கு போயுள்ளான்.  இரவிலும் போனில் விளையாடி விட்டு, தூங்காமல் இருந்துள்ளான். இதனால், சிறுவனை அவனது தந்தை கண்டித்துள்ளார்.

Suicide

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் அந்த சிறுவன் மொபைல் போனில் விளையாடியபோது, அதனை கவனித்து, போனை பறித்த அவனுடைய தந்தை, போய் தூங்கும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த சிறுவன் பதிலுக்கு, போனில் விளையாட விடவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளான்.

அடுத்த நாள் காலை, சிறுவனை சென்று பார்த்த தந்தை அதிர்ச்சியடைந்து போயுள்ளார். சிறுவன் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டான். உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் உயிரிழந்து விட்டான் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Police

இதுகுறித்து மல்வானி போலீசார் சிறுவனின் தந்தையின் வாக்குமூலத்தை பதிவு செய்து விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web