கணவர் ஆயுளுக்காக விரதம்.. மாலையில் விஷம் வைத்து கொன்ற மனைவி.. உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

 
Uttar Pradesh

உத்தரபிரதேசத்தில் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ காலையில் இருந்து விரதமிருந்த மனைவி, மாலையில் கணவரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷைலேஷ் குமார் (32). இவரது மனைவி சவிதா. இவர் கர்வா சவுத் பண்டிகையின் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வைலேஷின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செயய உண்ணாவிரதம் இருந்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை ஷைலேஷ்  மும்முரமாக செய்துள்ளார்.

dead-body

இதனிடையே, கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சவிதாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மாலையில் விரதத்தை முடித்து ஷைலேஷிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இருப்பினும் இருவரும் சமாதானம் ஆகி ஒன்றாக சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஷைலேஷ் மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து சவிதா அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். ஷைலேஷ் வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் ஷைலேஷின் நிலைமைய கண்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷைலேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

women-arrest

தான் உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக சவிதா வீடியோ மூலம் ஷைலேஷின் சகோதரருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தலைமறைவான சவிதாவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web