பிரபல யூடியூபர் சாலை விபத்தில் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.. முதல்வர் இரங்கல்!

சத்தீஸ்கரை சேர்ந்த இளம் யூடியூப் காமெடி நடிகர் தேவராஜ் படேல் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தின் தாப் பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் படேல் (22). இவரது தந்தை கன்ஷியாம் படேல் ஒரு விவசாயி. Dil Se Bura Lagta Hai என்ற வசனத்தின் மூலம் இவரது வீடியோ வைரலாகி புகழ்பெற்றார் தேவராஜ். இவரது வீடியோக்களுக்கு முதல்வர் பூபேஷ் பகேல் கூட ரசிகர் தான்.
அவரது யூடியூப் சேனலுக்கு 4 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், இன்ஸ்டாவில் 57 ஆயிரம் ஃபாலோவர்ஸ்களும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மதியம் ஒரு புதிய வீடியோ எடுப்பதற்காக தனது நண்பனுடன் தேவராஜ் படேல் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி, அவர்களின் பைக் மீது மோதியது.
இதில் தூக்கியெறியப்பட்ட தேவராஜ் படேலுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பருக்கும் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி தேவராஜ் படேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
“दिल से बुरा लगता है” से करोड़ों लोगों के बीच अपनी जगह बनाने वाले, हम सबको हंसाने वाले देवराज पटेल आज हमारे बीच से चले गए.
— Bhupesh Baghel (@bhupeshbaghel) June 26, 2023
इस बाल उम्र में अद्भुत प्रतिभा की क्षति बहुत दुखदायी है.
ईश्वर उनके परिवार और चाहने वालों को यह दुःख सहने की शक्ति दे. ओम् शांति: pic.twitter.com/6kRMQ94o4v
தேவராஜ் படேலின் மறைவுக்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். பூபேஷ் பாகல் ட்விட்டர் பதிவில், “நம்மை சிரிக்க வைத்து கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்த தேவராஜ் படேல் நம்மை விட்டு பிரந்தார். இந்த இளம் வயதில் அபார திறமை கொண்ட தேவராஜ்ஜின் மறைவு மிகுந்து வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.