வீட்டில் இறந்து கிடந்த பிரபல Food Vlogger ராகுல்.. என்ன நடந்தது? ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Rahul N Kutty

கேரளாவில் பிரபல ஃபுட் விலாகரான ராகுல் என் குட்டி நேற்று இரவு அவரது வீட்டில் இறந்து கிடந்தது பெரும் அதியர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் என் குட்டி. இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் புகழ்பெற்ற இன்ஸ்டகிராம் பக்கமான ‘ஈட் கொச்சி ஈட்’ வீடியோக்கள் மூலம் உணவுப் பிரியர்களுக்கு பரிச்சயமான நபராக இருந்து வந்தார். உணவு பிரியர்களையும், சமூகங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியான சமையல் கலாச்சாரத்தின் உறுப்பினராகவும் ராகுல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Rahul N Kutty

இந்த நிலையில் ராகுல் என் குட்டி மாதவனத்தில் உள்ள அவரது வீட்டில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இறுதியாக கடந்த புதன் கிழமை அன்று உணவு வ்லாக் பற்றிய அவரது கடைசி வீடியோ வெளியிடப்பட்டது. ஈட் கொச்சி ஈட்-டின் ‘ஓ கொச்சி’ வீடியோக்களிலும் அவர் அடிக்கடி தோன்றுவார், இது கொச்சியில் உள்ள புதிய விஷயங்களை பற்றி அறிய உதவும் ரீல்களைப் பகிரும் ஒரு பக்கமாகும்.

ஈட் கொச்சி ஈட் சமூக ஊடக தளங்களில் ஒரு இடுகையின் மூலம் அவருடைய இறப்பு செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. அந்த பக்கத்தில் வெளியான பதிவில், “தயவுசெய்து அவரை உங்கள் பிரார்த்தனையில் வைத்திருங்கள், இந்த அழகான ஆன்மாவின் இழப்பைத் தாங்கும் வலிமையை நாங்களும் அவரது குடும்பத்தினரும் பெற விரும்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஃபுட் விலாகர்களும் தங்கள் இரங்கலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

From around the web