குடும்ப தகராறு.. 5 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய்!

 
Kerala

கேரளாவில் குடும்ப தகராறில் தாய் தனது 5 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே உள்ள மேல்வெட்டு பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி சரண்யா (25). இந்த தம்பதிக்கு 5 வயதில் மிதுன் என்ற ஒரு மகன் இருந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் சரண்யா தனது மகன் மிதுனை தூக்கி கொண்டு வா்க்கலா அருகே அயந்தி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றார்.

dead-body

அப்போது அந்த வழியாக வந்த கொல்லம் - கன்னியாகுமரி ரயில் மோதி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வர்க்கலா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் சரண்யா, மிதுன் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வர்க்கலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Police

விசாரணையில், சரண்யாவின் கணவர் மகேஷ் மது போதைக்கு அடிமையானவர் என்பதும், இதனால் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறால் சரண்யா மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web