டியூஷன் பீஸ் கேட்ட டீச்சரை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் மாணவர்கள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி!!

 
MP

மத்திய பிரதேசத்தில் தங்களிடம் டியூஷன் பீஸ் கேட்ட வாத்தியாரை இரு மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்பியோடிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஜவுரா ரோட் பகுதியில் வசித்து வருபவர் கிர்வார் சிங். இவர் அங்கு கோச்சிங் சென்டர் நடத்தி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இவரிம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவகே ரத்தோர் மற்றும் வினய் ரத்தோ என்ற 12ம் வகுப்பு மாணவர்கள் டியூஷனுக்கு வந்துள்ளனர்.

டியூஷன் படித்த இந்த மாணவர்கள் ஆசிரியர் கிர்வாருக்கு பீஸ் கொடுக்கவில்லை. படித்து முடித்து மூன்று ஆண்டுகள் கடந்தும் ஆசிரியர் அந்த இரு மாணவர்களிடம் பீஸ் எப்போது தருவீர்கள் என்று கேட்டுள்ளார். ஆசிரியர் கிர்வார் தொடர்ந்து தங்களிடம் பணம் கேட்டு நச்சரிப்பதாக மாணவர்கள் ஆத்திரமடைந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜூன் 22ம் தேதி விபரீத முடிவை எடுத்தனர். 

gun

பண விவகாரம் பேசலாம் என ஆசிரியரை பைக்கில் வைத்து வெளியே அழைத்து வந்துள்ளனர். ரோட்டில் நிற்க வைத்து பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென கிர்வரை கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த பதைபதைக்கும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் வீடியோவாக பதிவாகியுள்ளது. 

வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ஆசிரியர் கிர்வார் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து குவாலியர் மருத்துமனைக்கு அவர் மாற்றப்பட்டார். ஆசிரியர் கிர்வாருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இளைஞர்கள் இருவரையும் தேடி வருகிறது. பட்டப்பகலில் சாலையில் ஆசிரியர் ஒருவரை அவரது முன்னாள் மாணவர்களே துப்பாக்கியால் சுட்டச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web