பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 4 பேர் பலி.. பஞ்சாபில் சோகம்
Updated: Sep 12, 2024, 02:47 IST
பஞ்சாபில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டம் நங்கல் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. வாடகை வீட்டில் இயங்கி வந்த இந்த பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.