37,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பிங்க!

இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசோசியேட் (Technical Associate) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே தங்களின் பதிவுகளை 04.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியின் பெயர்: டெக்னிக்கல் அசோசியேட் (Technical Associate)
காலிப்பணியிடங்கள்: 25
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MCA/ M.Sc./ B.Tech/ Diploma/ M.Tech/ PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
20.1.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.37,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written Test, Hands-on Test, Interview ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://fsi.nic.in/recruitments.php என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 04.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.12.2023