தேர்தல் முறைகேடு.. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?
போலி வாக்காளர்கள், பொய்யான தகவல்கள், ஒரே நபருக்கு பல வாக்குச்சாவடிகளில் வாக்குகள், இல்லாத தந்தை பெயர், 70 வயதுக்கும் மேற்பட்ட முதல் தடவை வாக்காளர்கள் என பல்வேறு முறைகேடுகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியினர் 6 மாதங்களுக்கு மேலாக கடுமையாக உழைத்து ஆதாரங்களைத் திரட்டியுள்ளதாகவும் இது ஒரு அணுகுண்டு போல் இருக்கிறது என்றும் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் பெங்களூரு மத்திய தொகுதி தேர்தல் முடிவு குறித்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய இந்தத் தொகுதியில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டும் பாஜக ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது. அதில் ஒரு லட்சம் வாக்குகள் முறைகேடு நடந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
சரியான முறையில் தேர்ந்தல் நடந்திருந்தால் மோடி பிரதமர் ஆகியிருக்க மாட்டார். வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்ற ராகுல் காந்தியின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்க்கு தேர்தல் ஆணையம் என்ன சொல்லப் போகிறது? ராகுல் ஆதாரம் காட்டும் தொகுதிகளில் மறு தேர்தல் நடக்குமா? உச்சநீதிமன்றம் தலையிடுமா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
